பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுந்துயர் விளைத்திடும் கோதெலாம் அகற்றிக் கொடியரைக் காப்பதும் காந்தியின் அன்பே, பணந்தனைக் குவித்திடும் பண்பறு நிலையைக் கணந்தொறும் இகழ்வது காந்தியின் அன்பே, முனிந்தெழும் தீமையை முற்றிலும் நலமாய்க் கனிந்திடச் செய்வது காந்தியின் அன்பே. நேரு எனும் மேரு அடிச்சவர்க்குத் தொண்டாய், பிடிச்சவர்க்குப் பெண்டாய் அடிமையான நாட்டைச் சீரு - செய்த அண்ணல் காந்திக்குப்பின் அறிவு ஆற்றல் தன்னில், அந்த ஸ்தானம் கொண்ட மேரு - மணி முடிசூடாத மன்னன் நேரு - மேதை மோதிலாலின் தவப் பேறு - தள்ளி அடைக்கும் சிறைதன்னில் அன்னை நாட்டுக்காக ஆயுள்தன்னில் பாதி கிடந்தார் - சொந்த ஆஸ்தி பூஸ்தியுடன் அருமைப்பெண்டு பிள்ளை அத்தனையும் விட்டுப் பிரிந்தார் - நான் ஆவி நீத்தபின்பு தேகந்தன்னை நெற்றிக் கணியும் சாம்பலாகச் செய்யுங்கள் - நம்ம அகிலபாரதத்தின் நிலங்கள் தோறும் எந்தன் ஆசைக்காக அள்ளிப் பெய்யுங்கள் - அது வளத்துக்கான உரமாகட்டும் - மக்கள் வறுமை நீங்கிப் பசி போகட்டும் - என்ற தலைவரான அந்த தியாகமூர்த்தி ஆத்ம சாந்திக்காக நம்ம நலத்துக்காக செய்த (பாடல் முடிவுறவில்லை) 31