பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொல்லவல்ல குண்டுகளைக் குளிர்விக்கும் காந்திஅன்பால் அல்லலெல்லாம் அகற்றுகின்ற அறம்வளர்த்து வாழ்ந்திருப்போம். நன்செய்புன்செய்ப் பயிர்துறந்து நகராளும் துரைகளுக்கே அஞ்சியடி பணிவதைத்தான் அருமையென்று மதித்திருந்தோம். பஞ்சையெனப் பட்டினியாய்ப் பசியறிந்த காந்தியன்பால் நன்செய்புன்செய்ப் பயிர்வளர்த்து நாட்டிலுண வாக்கிடுவோம். ஒதிவைத்த உண்மைதனை ஒருபொழுதும் உணராமல் சாதிமதச் சண்டையிலே சமர்த்தரென்று பேரெடுத்தோம். ஆதிமுதல் வேதமெல்லாம் ஒதுகின்ற காந்தியன்பால் சாதிமதச் சண்டையற்ற சாந்தரென வாழ்ந்திருப்போம். கலைஞருக்குக் கவிதை மடல்: கண்ணாலே காணாத புகழ் வடிவாம் கருத்துணர் பேரறிஞரான அண்ணாவின் நிழலாகும் அன்புடைய தம்பியரில் முதல்வா! இன்பப் பண்ணாகும் தமிழ்ச் செல்வா பட்சமிகும் உமைக்காண வேண்டும் முக்கியம் தண்ணான மொழியாலே வருகவென பதிலுடனே தருக நன்றே. 33