பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தீனா. மூனா... கானா!

தீனா... மூனா... கானா. எங்கள்

தீனா... மூனா... கானா.
அறிவினைப் பெருக்கிடும் உறவினை வளர்த்திடும்
பகுத்தறிவோடு நாட்டினர் வாழ
திருக்குறள் தந்தார் பெரியார் — வள்ளுவப் பெரியார்!
அந்தப் பாதையில் நாடு சென்றிட வழி
வகுப்பதும் அதன்படி நடப்பதும் எங்கள்...

(தீனா)


கருப்பு சிவப்பு என்ற பேதத்தை நீக்கும் — தலைக்
கனத்தைக் குறைத்து நல்லதன்மையை யுண்டாக்கும்
கள்ளர் மறவரோடு பள்ளுப் பறைகளென
உள்ள பேதங்களை ஒழித்துக் காட்டும் எங்கள்...

(தீனா)


காந்தியடிகளின் அஹிம்சையும் - வள்ளுவன்
கருணையும் ஒன்றெனக் கொள்ளுவதும் எங்கள்...

(தீனா)


தனயன் மாருக்கொரு தந்தையைப் போலே
தங்கைகளுக் கொரு தமக்கையைப் போலே
தம்பிமாருக் கொரு அண்ணா... போலே
சரியும் தவறும் இதுவெனக் காட்டும்
தமிழன் பெருமைதனை நிலை நாட்டும்

(தீனா)


— பணம்


நாட்டிய ஆசிரியர் தண்டபாணி அவர்கட்குப் பிறந்தநாள் வாழ்த்து

அறுசீர் விருத்தம்

கண்கள்முகங் கரங்களோடு விரல்களாலும்
கவின்கொண்ட அங்கத்தின் அசைவினாலும்
பண்பொருளைத் தோற்றுவிக்கும் கலைஞன்; ஞான
பரதமுனி மரபினனும் இவனேயென்ன
மண்புகழும் நாட்டியத்தின் சக்கரவர்த்தி
மனந்தனிலே யாம் வைத்த அன்பால் நல்ல
நண்பர் தண்டபாணியவர் பிறந்தநாளை
நன்னாளாய்க் கொண்டாடல் நலமே யம்மா!

35