பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னாள் இது போலே... ஆண் பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே? முன்னால் வந்தது எத்தனையோ நன்னாள் - அதிலே...(பொன்) நல்ல மலர் வாழ் திருவின் வடிவம் உனதல்லவா? தமிழ் மறைபேசும் நிறை - உன் நிறை மேலும் நான் சொல்லவா? பக்கம் மெல்லவா! (பொன்) பெண் : குலமாதர்கள் கொண்டாடும் குணமாமணியே - நல்ல குலமாதர்கள் கொண்டாடும் குண மாமணியே! மாசறு பொன்னே வலம்புரி முத்தே! காசறு விரையே கரும்பே தேனே! மலையிடைப் பிறவா மணியே என்கோ: அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ - என்று குலமாதர்கள் கொண்டாடும் குண மாமணியே! (பொன்) - பூம்புகார் தாரா தாரா வந்தாரா! தாரா தாரா வந்தாரா? சங்கதியேதும் சொன்னாரா? - அவர் சந்தோஷமாக வந்தாரா? - இல்லை சஞ்சலமாகவே இருந்தாரா? (தாரா) சீரான உன்னை ஜோடியோடு தெரிசனம்தான் செய்தாரா? தேவி என்னைக் காணோமென்று சிங்காரமாய் வைதாரா? (தாரா) பூத்தமுல்லை மலர்தன்னைப் பார்த்து மெல்லச் சிரித்தாரா? வாய்த்த இவளை மனதில் எண்ணி மரத்தைக் கட்டிப் பிடித்தாரா? (தாரா) - தெய்வப் பிறவி 39