பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் ஆண் பெண் : ஆண் காதல் ஆட்சி மாவொடு தழுவும் மலர்க்கொடி போலே மாது நான் மருவ முடியாதோ? மாதுன்னால் முடியும் ஆனாலும் மாண்பெனும் மணிமுடி தடையுண்டு தெரியாயோ...? மேவும் காதலில் உயர்வு தாழ்வெனும் வித்தியாசம் நினைப்பதும் இயல்பாமோ? விழியால் தொழிலால் வித்தியாச மில்லாது வினவுகிறாய் பதில் சொல்லப் போமோ? கலப்பை தூக்கி முன்னாலே - கஞ்சிக் கலயம் தாங்கிப் பின்னாலே கழனி செல்லும் அழகைப் பாரு கண்ணாலே! - புருஷன் மனைவி (கழனி) - சொர்க்கவாசல் குறையாத வட்ட நிலா அஞ்சுவகைப் பூ மலர்ந்த நந்தவனமோ - இவள் அழகு சுமந்து வந்த அங்க ரதமோ! கொஞ்சுகின்ற பஞ்சவர்ணக் கிளி யிவளோ - இவள் கோலமது கண்கள் உண்ணும் ஆரமுதோ வாசமிகும் கூந்தலது வான் முகிலோ வளர்ந்து குறைந்திடாத வட்டநிலவோ அஞ்சுகம் போல ரஞ்சிதப் பெண்மணி வந்தாள் ஆனந்தம் பெற அழகு லிருந்து தந்தாள் (அஞ்சுவகை) 42