பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்காரப் பைங்கிளியே பேசு! சிங்காரப் பைங்கிளியே பேசு! செந்தமிழ்த் தேனை யள்ளியள்ளி வீசு! (சிங்கார) சங்கம் புகழ் முரசுகொண்ட தனியரசு - என் தமிழ் மொழிக் கெதுவோ நீதரும் பரிசு? (சங்கம்) திங்கள் நிறை மலர் முகத்தில் செவ்விதழ் சேர்த்து நித்தம் திருவே தருவேன் மனம் போல் குறையாதொரு நூறு முத்தம் (திங்கள்) நீரே சொந்தம் ஆனிர் பேச்சிலே - எதிரில் அந்த நினைவே மறந்தேன் உன் கண் வீச்சிலே! இந்த வீரர் எங்கள் நாட்டுக்கினி அதிபதியே! விஜயாள் ஒன்றே போதும் வெகுமதியே! ஊம். (சிங்கார) பாண்டிய நாட்டுப் பூங்குயில் பேடு ஊஞ்சல் ஆடுதே... ஊஞ்சல் ஆடுதே! (பாண்டிய) அது வேண்டிடும் சோழ மண்டலத் தென்றல் ஒடிவீசுதே. ஒடோடி வீசுதே! ஆசைக் கொடி தனியே பிணைந்தாடிடும் வேளையிலே (ஆசைக்) ஆணொடு பெண்ணும் கண்ணொடு கண்ணும் ஜாடை பேசுதே! - ரெண்டும் காதல் பேசுதே! பளிங்கு போலே தெளிந்த நீரில் மீன்கள் துள்ளி யாடுதே! - இரு மீன்கள் துள்ளியாடுதே! 46