பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளங்கும் எந்தன் விஜயாவின் கண் மீன்கள் ரெண்டும் ஆடுதே! - விழி மீன்கள் ரெண்டும் ஆடுதே! (விளங்கும்) அலையோடு அலைதாவி ஒன்று சேர்ந்ததே! (அலை) ஆம்! அதுபோல் நம் இரண்டுள்ளம் ஒன்றுசேர்ந்ததே! பளிங்கு போலே தெளிந்த நீரில் மீன்கள் போலே ஆடுவோம் - இரு மீன்கள் போலே ஆடுவோம்! - மனோகரா நீல வான வீதி மேலே. பல்லவி இன்ப, லோக ஜோதி ரூபம் போலே நீல வான வீதி மேலே சந்திரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே - இன்பச் சந்திரிகா - நீ வந்தாய் அன்பால் ஆடவே! சரணம் மின்னும் சொக்க வெள்ளிப் பொட்டு வேலைதான் - செய்த மேக நீல வர்ணப் பட்டுச் சேலைதான் - சுற்றி வெண்ணெய்க் குன்றம் என்னும் பெண்மைக் கோலம் தான் - பெற்ற உன்னைக் கண்டு காதல் கீதமே - கடல் முன்னும் பின்னும் தாவிப் பாடும் நேரமே - வாழ (உன்னை) எண்ணும் ஆசைப் பெண்ணும் நேச ஆணுமே - காணச் (சந்த்ரிகா) சொந்தம் என்றே சூடும் மனமாலைதான் - கொண்ட ஜோடி யொன்றுகூடும் முதல் மாலைதான் - இன்றே அந்தம் கொள்ள என்றே நல்ல வேளை தான் - கண்டு (இன்ப) - துய உள்ளம் 47