பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே! கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே வார்ப்புரு:Gap3 (விண்ணோடும்)

அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே விளையாடி... இசைபாடி... விழியாலே உறவாடி இன்பங் காணலாம்.

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே (விண்ணோடும்) தேடாத செல்வ சுகம் தானாக வந்தது போல் ஓடோடி வந்த சொர்க்க போகமே! ஓடோடி வந்த சொர்க்க போகமே! காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினிலே ஆனந்த போதையூட்டும் போகமே - வாழ்விலே விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பங் காணலாம்! (விண்ணோடும்) சங்கீதத் தென்றலிலே சதிராடும் பூங்கொடியே சந்தோஷம் காண உள்ளம் நாடுதே! மங்காத தங்கமிது மாறாத வைரமிது! ஒன்றாகி இன்பகீதம் நாடுதே - வாழ்விலே! விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம்: (விண்ணோடும்) - புதையல் 48