பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலையிட்ட மங்கை யாரோ? மாலையிட்ட மங்கை யாரோ? என்ன பேரோ? அந்த மானினியாள் எந்த ஊரோ? - உங்கள் மனம் நாடியே சுகமே தரும் மதிமேவிய வனிதாமணி மாமதவேள் தென்றல் தேரோ? - திரு வாய் மலர்ந்தே அருளிரோ? முகிலுக் கிணையு மென்ற குழலைத் தழுவி நின்ற முகவட்டமது சந்த்ர பிம்பமோ? - பிறை நிகர் நெற்றி அவள் கண்ட சங்கமோ? முல்லையோ? இடையில்லையோ? மலர்க் கொல்லையோ? வளர் செல்வியோ? - தொடை மகரத் துவஜன் கோயில் தம்பமோ? - தங்கள் சகபத்தினி உடலுந் தங்கமோ? கெண்டை மீனும் மானும் கண்டு நானும் சுழல் வண்டு நேரும் விழி வல்லியா? - கற் கண்டு தேன்மருவும் சொல்லியா? - தமிழ்ச் சிந்து பாடி மணித் தண்டையோடு பாதம் கொண்டு ஆடுகின்ற மெல்லியா? - எந்தன் சிந்தைதான் மகிழச் சொல்லையா! காவியக் கலையோ? - சிற்ப ஓவியச் சிலையோ? - அந்தக் காமனவன் சிலை பூமியின் மிசைக் காரிகையா புருமாறி வந்தாளோ? காவின் மலர்க் கொடியோ? - கல்வி கேள்வியி லெப்படியோ? - உங்கள் காதலி எந்தன் மாதிரி - யன் போடு காமுறுஞ் சல்லாப ரசப் பெண்ணோ? கற்பனையின் சீரோ? கட்டழகி யாரோ? அற்புத மின்னோ? குணவதி அவளும் உமக்குத் தகுந்தவளோ? - இரத்தக் கண்ணர் 50