பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடை மறைந்தால்... கோடை மறைந்தால் இன்பம் வரும் - கூடிப் பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்! ஒடும் தென்றல் முன்னால் வரும் - இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்! வாசமா மலர் வாவென் றசைந்ததே! ஆசையால் வண்டு தானே பறந்ததே! பேசினால் சுகம் ஒடோடி வருதே! மாசில்லா இன்பம் இனிமேல் நமதே! (கோடை) பாரிங்கே கண்ணே நேராய்ச் சந்த்ரோதயம் பகலில் தோன்றிடுமாமோ? அதிசயம்! பாதை தேடி அலையும் என் விழியில் பாவை உன் திருமுகமே உதயம்! ஆனந்தம் அது எங்கே பிறந்தது? அமைந்த ஆண் பெண் அன்பால் மலர்ந்தது! ஊனும் உயிரும் ஒன்றாய்க் கலந்தது உண்மைக் காதலில் உள்ளம் கனிந்தது! (கோடை) - மஞ்சள் மகிமை பொழுது விடிஞ்சா...! பொழுது விடிஞ்சா ராஜாராணி - நாம் பூமியறிய புருஷன்நீ மனைவி நான் (பொழுது) கண்டோர் எவருமே கடவுளாய் வணங்கவே கற்றோர் புகழவே கனிவுபெறும் இன்பம்தரும் (பொழுது) எளியவரை லேசாக மதிப்போம் இரவிலே குடையதனைப் பிடிப்போம்; அழகின் விலாசம் அணியின் விசேஷம் அளவற்றதோர் சுக முற்றும் நாம் அடைந்து விளங்க வரும் (பொழுது) - வனசுந்தரி 52