பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னநடையில் ஒரு சின்னநடை! அன்ன நடை தனிலே சின்ன நடை தான்கலந்தே முன்னாலே போகுதடா முத்துப் பல்லுச் செவலக் கண்ணு - நன்னானே - நானே தண்டட்டீக்கு மேலட்டிக்கு தங்கந் தயிலாளே - நல்ல சலங்கே மாலை சலசலங்குது பொன்னுங் குயிலாளே - ஹை - (தண்டட்டீக்கு...) கண்டவர்கள் மெய்மறந்து கருத்துங் கலங்கிடவே கொம்புகளை யாட்டிக்கிட்டு கொஞ்சு நடை போடுதடா சந்தனச்சாலை யோரத்திலே சாயங்கால நேரத்திலே ஜாடையாக நாம காட்டும் சமாச்சாரம் புரியலே நன்னானே - நானே - (தண்டட்டிக்கு...) பின்னாலே வரும் வண்டியே - கடைக் கண்ணாலேதான் பாக்குது; கன்னாபின்னான்னு காடுமேடு கல்லிலும் முள்ளிலும் நடக்குது; தன்னாலே இது தவிக்குது - நல்ல தடம்விட்டுத் தடம் கடக்குது; சொன்னா ஆளை மொறைக்குது - துடி துடிக்குது சும்மா வெடைக்குது: நன்னானே - நானே - (தண்டட்டிக்கு...) 56