பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் : ஆண் : பெண் : ஆண் பெண் : தேனில் சீனி கலந்த பொம்மை! சிங்காரப் பொம்மெ! - என் சிங்காரப் பொம்மெ! - செந் தேனதிலே வெண்சீனிகலந்து செய்தானோ பிரம்மன்? உன்னைச் செய்தானோ பிரம்மன்? மச்சானே வாங்க யெம் மச்சானே வாங்க - உம்மெ மனுஷனாகவே மதிச்சாப் பாவம்: அவதாரம் நீங்க - ஏதோ அவதாரம் நீங்க! முன்னழகும் பின்னழகும் முகத்திலே ரெண்டு கண்ணழகும் முடியழகும் சடையழகும் முப்பத்திரண்டு பல்லழகும் நடையழகும் இடையழகும் நாக்கு மூக்கு வாக்கழகும் இன்னம் மற்றதெ யெல்லாஞ் சொல்லட்டா இதோட விஷயத்தெ நிறுத்திக் கொள்ளட்டா (சிங்கார) பொண்ணெத் தவிரப் புகழ்ந்து பேச மண்மேல் ஒண்ணுங் கிடையாதா? கண்ணுக் கழகாம் கடவுள் சிருஷ்டியை எண்ணிப் பார்க்கவும் கூடாதா? (மச்சானே) பொம்பளைக்கினெ பொம்பளெதான் புலவோர் சொன்னதும் இதையேதான், புராண காவிய நூல்களெப் பாரு புதுசா வருகிற நாவலெப் பாரு! காணும் சித்திரக் கலைகளைப் பாரு கல்லால் சிற்பச் சிலைகளைப் பாரு இன்பப் பொருளாய் சக்தியானதாய் எங்கும் நெறஞ்சது அதுவே நீதான்! (சிங்கார) படிச்சது நல்லாத் தெரிஞ்சுது - நீ பாசாகாததும் புரிஞ்சுது கொடுக்கணும் இதுக்கே ஒனக்கே ஏதாச்சும் ஒண்னும் கையிலில்லையே என்னசெய்வது? (மச்சானே) 57