பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றாய் வாழனும்! நன்றாய் வாழனும்! அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழனும் - ஓர் ஆயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழனும்! அன்பினால் மேவும் சொந்தமாய் என்றும் - நீங்கள் ஒன்றாய் வாழனும் கொண்டவரை உள்ளம் என்னும் கோயிலுக்குள் வைக்கோணும்! கொழுந்தனைத் தானே பெற்ற குழந்தையாக நினைக்கணும்! பந்து ஜனம் எல்லோருக்கும் பட்சமாக இருக்கணும்! பர்த்தாவைப் பெற்றோர் தம்மைப் பாதுகாத்து மதிக்கணும்! அன்பினால் கண்ணே! சொந்தமாய் என்றும் - நீங்கள் ஒன்றாய் வாழனும் - ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழனும்! இன்ப துன்பம் ஏதானாலும் பங்குடையாள் சம்சாரம் இல்லாளும் இல்லா வீட்டில் ஏற்படாது அலங்காரம்: அம்புவியில் ஆணில் பாதி பெண்ணென்பது நீதிசாரம் அறிந்துநட தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதாரம் அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழனும் - ஓர் ஆயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழனும்! 62