பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் : ஆண் : பெண் : ஆண் : பெண் : மனக்கோயிலில் ஒரு சிலை: செந்தா மரை மனக் கோட்டையில் நானொரு தேவியின் சிலையமைத்தேன் - என் சேம லாப சுக வாழ்வில் அவளே செல்வமாக நினைத்தேன் - நான் (செந்தாமரை) தாமரை மனக் கோயிலில் நானொரு சாமியைக் குடிவைத்தேன் - என் தந்தை தாய் முதல் சகலமும் அவராய்ச் சந்தோசம் படைத்தேன்! (தாமரை) அறிவுத் தந்தையும் அழகு அன்னையும் உறவு கொண்ட கருவாம் - நல்ல அச்சம் நாணம் மடம் பயிர்ப்புப் பெண்மையாய் அங்கங் கொண்ட திருவாம் - என் (செந்தாமரை) கருணை ஈகை யருள் கடமையாம் உடமை பொறுமை யாவு மொன்று கலந்ததோ யெனக் கவிஞர் கற்பனை காட்டும் ஞானக் குன்று - என் (தாமரை) இன்பமாகிய கடலிலாடிட இசைந்த தங்க ஓடம் - நல்ல இல்லறந்தனை நல்லறஞ்செய இணைந்த தேவி சேடம் பொன்னைச் சார்ந்த நவமணிகள் மின்னிடும் பூடணங்கள் எதற்கு? என்னை யாள்பவர் அருகே யமர்ந்து இருந்தாலே யெனக்கு (தாமரை) 64