பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் : ஆண் பெண் : ஆண் பெண் : கூட்டுக் கிள்ளையும் வீட்டுக் கிள்ளையும் நாம, சொன்னாத்தான் பின்னே சொல்லும் கூட்டுக்கிள்ளை - அது காட்டுக்கிள்ளை - நீ சொல்லாமெப் புரிஞ்சுகொள்ளும் வீட்டுக்கிள்ளை - தமிழ் நாட்டுக்கிள்ளை. 露 பள்ளியில் படிப்பதிலே சிங்கக்குட்டி - இளஞ் சிங்கக்குட்டி - சேர்ந்து பழகுவதில் பத்தரைமாத்துத் தங்கக் கட்டி - பசுந் தங்கக் கட்டி (நாம) பெண்ணை வாசமுள்ள பூவென்று சொல்லுவாங்க - பலர் சொல்லுவாங்க - நாஞ் சொல்லமாட்டேன்! யேஞ் சொல்லமாட்டே? விசு வாசமதில் இல்லை என்று தள்ளிப் போட்டேன் - ஒதுக்கித் தள்ளிப் போட்டேன். ஆணை அருச்சுனன் என்று கூடச் சொல்லுவாங்க - யாரும் சொல்லுவாங்க - உன்னை அப்படி நான் ஒப்பிட்டுத்தான் சொல்லமாட்டேன் 65