பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் : ஆண் பெண் வனதேவ ராஜகுமாரா: வனதேவ ராஜ குமாரா எனதாசை ஆருயிர் மாரா புகழ்மாலை சூடிடும் வீரா! புதுவாழ்வு தேடிட வாராய்!

வனதேவ ராஜ குமாரி!

மதிமேவும் ஆருயிர்ப் பாரி மணவாழ்விலே சுகங்கோரி! உனைநாடினேன் மையல் மீறி!! வாடாத மருக் கொழுந்தே! வாசமுள்ள பூங்காவே! தேடாமலே வந்த திரவியமே! தீட்டாத இயற்கைச் சித்திரமே!!. (வனதேவ) எனக்கு வாய்த்த உயிர் ஓவியம்! எனக்கு வாய்த்தது நல்ல உயிரோவியம் - அதற்கு எழுதினால் தகும் இன்ப ரச காவியம்! கொடுத்து வைத்தவ இன்று நானல்லவா? - முகக் குறிப்பில் காணலாம் அதைத்தான் சொல்லவா? - கை இனிக்குந் தமிழ்போல இளமை மாறாதது - என் இதய பீடத்தை விட்டு நீங்காதது செடிவளர்த்து மலரெடுத்துச் தெய்வப் பூசனை நான் செய்ததாலே வந்ததிந்த ஜென்ம வாசனை - அருள் வடிவெடுத்து வந்தசர்வ குணநேசனை - இக வாழ்க்கை மலரக் கொண்டேன் எனக்கேன் யோசனை? 73 (இப்ப) (கொடுத்து) (இப்ப)