பக்கம்:உணர்வின் எல்லை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

உணர்வின் எல்லை

“கலைமகள், பனுவ லாட்டி, காயத்ரி ஞான மூர்த்தி,
உலகமா தாபி ராமி, ஒன்னிய வெள்ளை மெய்யாள்,
இலகுவெண் சலச முற்றாள், பாரதி, இசைம டந்தை,
மரையன் மனைவி, வாக்காள், வாணி,நா மகள்பே ராமே.”


எனச் சூடாமணி நிகண்டு பாரதியின் பெயர்களைப் பகர்கின்றது.

‘பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்

வேதாந்த முத்தியுத் தந்தருள் பாரதி .........’


என்று, தொழுவார்க்கு இரங்கிக் கண்ணருள் புரியும் தாவில் கலை மடந்தையை, ‘பாரதி’ எனக் கம்பரும் பகர்ந்துள்ளார். ஆகலின், ‘பாரதி’ என்ற சொல்லுக்கு, ‘கலைமகள்’ என்ற பொருள் உண்டென்பது புலனாகின்றது.

அடுத்து உள்ள, ‘பாரதி’ என்ற சொல்லைப்பற்றி அறியாதார் யார்? ஒவ்வொரு தமிழன் உள்ளத்திலும் இருந்து ஊக்கி வரும் ஒண்டமிழ்ப் புலவர் பெருமானார் அல்லரோ அவர் ? அவர் தாம் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார். அவர், ‘பாரதி’ என்ற பதத்திற்கு ஏற்ற பண்புடையவர் ஆவர்.

பாரதியார் கலைமகளைக் குறித்துப் பைந்தமிழ்ப் பாடல்கள் பல பாடியுள்ளார். அப்பாடல்கள் படிப்பவர் உள்ளத்தைப் பரவசப்படுத்த வல்லன ; கற்றோர் உள்ளம் கசிந்து உருகுமாறு செய்யும் நீர்மையன.

இவ்வியனுலகில் மக்கள் விரும்புவது ஒன்று; வெறுப்பது ஒன்று. விரும்புவது இன்பம்; வெறுப்