பக்கம்:உணர்வின் எல்லை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

உணர்வின் எல்லை

பின் குற்றமுணர்ந்து குணவானாகி’த் திருவருள் துணையால் உய்ந்த செய்தியைச் சித்திரிப்பதே இந் நொண்டி நாடகங்களின் நோக்கம். 18ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்றிருந்த இரு பெரு நாடகங்கள் இராம நாடகக் கீர்த்தனையும், பாரத விலாசமுமாகும். இவற்றை முறையே அருணாசலக் கவிராயரும், இராமச்சந்திர கவிராயரும் இயற்றினர் என்பர். இராமச் சந்திர கவிராயர் ‘இரங்கூன் சண்டை நாடகம்’ என்ற மற்றொரு நாடகமும் எழுதியுள்ளார், இதுவே சமீப நூற்றாண்டுகளில் தமிழில் தோன்றிய முதல் வரலாற்று நாடகம் என்பர். பிற்காலத்தில் தோன்றிய நாடகங்களுள், புருரவச் சக்ரவர்த்தி நாடகம், அரிச்சந்திர நாடகம், சாரங்கதரா நாடகம், இரண்ய சம்ஹார நாடகம், உத்தரராமாயண நாடகம், கந்தர் நாடகம், காத்தவராய நாடகம், குசலவ நாடகம், ஜமதக்னி நாடகம், பாண்டவர் சூதாட்ட நாடகம், துளசிதாஸர் நாடகம் என்பன பெயர் பெற்றனவாகும். கடந்த சில நூற்றாண்டுகளில் தலபுராணங்களையும், இதிகாச புராணக் கதைகளையும், நாயன்மார் வரலாறுகளையும் ஒட்டி எழுந்த நாடகங்கள் பலப் பல. தமிழில் எழுந்த முதல் சமூக நாடகம் காசிவிஸ்வநாத முதலியார் இயற்றிய டம்பாச்சாரி விலாசமே என்பர். திரிசிரபுரத்தில் கோயில் கொண்டுள்ள தாயுமான பெருமானின் வரலாற்றை உட்கொண்டு 1892-ஆம் ஆண்டில் ஆதிலட்சு அமிம்மாள் என்பவர் இரத்தினாவதி நாடக அலங்காரம் என்ற நூலை இயற்றினார். இந் நாடகம் தோன்றுவதற்கு முன்னே, 1887 இல், இலட்சுமி அம்மாள் என்பவர் சகுந்தலை விலாசம் என்ற நாடகத்தையும், 1889ல் வேம்பம்மாள் என்பவர்