பக்கம்:உணர்வின் எல்லை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

உணர்வின் எல்லை

போக்கில் திருவள்ளுவர் உள்ளத்தோடேயே உறவு கொண்டு ஒன்றிப்போதல் இயற்கை. அதனால், எத்தனையோ உண்மைகள் விளக்கம் பெறும். அந் நிலையில் திருவள்ளுவரைப் பற்றிய ஓர் உண்மை—அவர் ஒரு பெரும் புரட்சியாளர் என்ற பேருண்மை—தெள்ளத் தெளியப் புலனாகும்.

வள்ளுவர் வாழ்ந்த காலம் தமிழ் இலக்கியத்தின்—தமிழ் இனத்தின் பொற்காலம். தழிழ் மக்களின் சிந்தனையிலும் வாழ்விலும் தேசீய ஒளி நிறைந்திருந்த நூற்றாண்டில் பிறந்த அவர் பாடிய தமிழ் மறையில் யாண்டும் புரட்சி மணமும் புதுமை மணமும் கமழ்கின்றன. அந்நூலின் அமைப்பையே—யாப்பையே—கூர்ந்து நோக்குவோம். பாத்தோற்றத்திலே ஒரு புரட்சி. பெரும்பாலும், அகவற்பாக்கள் வாயிலாகவே புலவர் பெருமக்கள் தங்கள் உள்ளக் கருத்துக்களை உணர்த்தி வந்த காலம் அது. பத்துப்பாட்டு என்னும் நூலில் குறைந்த அடிகளையுடைய முல்லைப்பாட்டு, 103 அடிகளைக் கொண்டு விளக்குகிறது; மிக அதிகமான அடிகளைக்கொண்ட மதுரைக் காஞ்சி, 782 அடிகளைப் பெற்றுத் திகழ்கிறது.

இந்திலையில் சங்க இலக்கியக் கடலில் வெண்பாக்களை—அதிலும் குறள் வெண்பாக்களைக் காண்பது அரிதினும் அரிது. அத்தகைய ஒரு சூழ்நிலையில் தோன்றிய வள்ளுவர், வாழ்க்கையையெல்லாம் அளந்து காட்டும் ஒரு பெரு நூலை—வான் மறையை—ஈரடியால் இயன்ற குறள் வெண்பாக்களாலேயே பாடிப் போந்தார் எனின், இலக்கியத் துறை-