பக்கம்:உணர்வின் எல்லை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

உணர்வின் எல்லை

செய்துள்ள திறத்தைக் கூர்ந்து ஆராய்வார் அறிதல் திண்ணம்.

முடியுடை மூவேந்தர் ஆட்சி மிக உயர்ந்திருந்த காலம் திருவள்ளுவர் காலம். சேர நாடு–சோழ நாடு–பாண்டி நாடு என்ற எண்ணம் முதிர்ந்திருந்த காலம் அது. அந்நாளிலே தம் வாழ்வின் அனுபவத்தை எல்லாம்—சிந்தனையின் செல்வத்தையெல்லாம்—திரட்டி எழுதிய தம் நூலுள், ஓரிடத்திலேனும் தமிழ் நாட்டு வேந்தரைக் குறிக்கும் சொல்லையோ சொற் இருடரையோ எங்கும் வள்ளுவர் குறித்தார் இலர். அதற்கு மாறாகத் திருக்குறளில் எழுவாய் முதல் இடறுவாய் வரை—உலகு என்னுஞ் சொல்லும், பொதுமைப் பொருளுணர்த்தும் சொற்களும், சொற்றொடர்களும் தக்க இடங்களில் திகழ்கின்றன.

இப்படி உலகப் பொதுமறையாய் விளங்கும் திருநூலை வாழ்க்கையின் எல்லாத் துறைகட்கும் பயன்பட வல்ல நன்னூலாகவும் செய்தருளிய திருவள்ளுவரின் திறத்தை என்னென்று போற்றுவது! தனி மனித வாழ்க்கைக்கும், சமுதாயப் பொது வாழ்க்கைக்கும் வேண்டிய எல்லா விதிகளையும் இவ்வளவு நுட்பமாகவும் திட்பமாகவும், தொகுத்தும் வகுத்தும் கூறும் நூல் வேறு எம்மொழியிலேனும் உண்டோ ? இல்லை என்றே துணிந்து கூறலாம்.

இவ்வாறு, ‘உலகப் பொதுமறையாகவும், வாழ்க்கையின் பன்னெறிகட்கும் பயன்படும் பெருநூலா கவும் விளங்க வல்ல ஒரு நூலை இயற்ற வேண்டும்,’