பக்கம்:உணர்வின் எல்லை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியும்-பாரதியும்

3

பதோ, துன்பம். ஆகலின், தங்கள் மனவிருப்பத்திற்கு ஏற்பத் துன்பத்தைத் தொலைத்து இன்புத்தைப் பெருக்கும் பொருள்களை எல்லாம், ‘தெய்வம்’ என்று மொழிதல் மக்கள் மரபு; உலக இயல்பு. இன்பங்கருமானல், உயிரற்ற பொருள்களுக்கும் உயிர் கொடுத்து, தெய்விகத் தன்மையையும் மனிதத் தத்துவத்தையும் ஏற்றிக் கூறுவது மக்கள் மரபு. இக்கருத்தில் சாதாரண மக்களுடன் மாபெருங் கவிஞர்களும் கலந்துகொள்கின்றார்கள் அல்லவா ?

மக்கள் மரபு

இவ்வுலகின்கண் மாந்தர்க்கு இன்பந் தரவல்ல பொருள்கள் எண்ணிறந்தன. என்றாலும், ஆன்ற புலமையுடைய சான்றோரால் போற்றி மதிக்கப்படுவது அறிவேயாகும். அதனலேதான், கற்றேர் கலைமகள, ‘அறிவுத் தெய்வம்’ என்று அறைகின்றனர். அறிவைப் பெருக்குவதற்குச் சிறந்த உதவியாய் உள்ளவை சான்றேர் போற்றும் சாத்திரங்களும், கற்றாேர் போற்றும் கலைகளுமேயாகும்.

ஒரிடத்தில் பாரதியார் கலைமகளே, ‘இன்பமே வடிவாகிடப் பெற்றாள்,’ என்று குறித்துள்ளார். பிறிதோர் இடத்தில்,

வீர மன்னர்பின் வேதியர் யாரும்

தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்

தரணி மீதறி வாகிய தெய்வம்.”


என்று இயம்பியுள்ளார்.