பக்கம்:உணர்வின் எல்லை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

உணர்வின் எல்லை

உள்ளம் வீறிட்டது போலவே, சமூகத் துறையிலும் புகுந்த கேடுகளைச் சாட விரும்பியது அவர் உள்ளம்.

‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்’ மேற்பால் நீர்ப்பால் எனப் பிரித்துக் காணும் போக்கு, சங்க காலத்திலேயே, ஒரு சாராரிடமேலும் இருந்தது என்பதற்குப் புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களே சான்று பகர்கின்றன. இந்நிலை நீடிப்பதை வள்ளுவர் திருவுள்ளம் விரும்பவில்லை. அதே நேரத்தில், கண்மூடித்தனமான மூர்க்கப் புரட்சியிலும் அவ்வறவோரின் நெஞ்சம் படியவில்லை. அறிவு வழிகின் று கருத்துலகில் புரட்சி செய்தார், கன்னித் தமிழின் துணை கொண்டு. அப்புரட்சியின் எதிரொலியையே,

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.’

என்றும்,

‘அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்

செந்தண்மை பூண்டொழுக லான்!’

என்றும் அப்பெருமகனார் பாடிய குறள் மொழிகளில் கேட்கறோம். ‘உயர்வு தாழ்வு’ வேற்றுமையை ஒழிக்க விரும்பிய திருவள்ளுவர், குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மீதோ அல்லது ஒரு சொல்லின் மீதோ காழ்ப்புக்கொள்ளாமல், ‘தனிவுடைமையைப்’ ‘பொது ‘உடைமை’யாக்கும் நயம் திறனும், நினைக்க நினைக்க இன்பமும், இறும்பூதும் பயப்பனவாகும்.