பக்கம்:உணர்வின் எல்லை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் ஒரு புரட்சியாளர்

103

சமுதாய வாழ்விற் கண்ட சீர்கேடுகளை நீக்கத் தமிழ்ச் சான்றோராகிய திருவள்ளுவர் உள்ளம் கருதியவாறே, தமிழ் மக்களின் பண்பாட்டின் சிகரமாய் விளங்கிய உரிமை வாழ்விற்கு காதல் வாழ்விற்கு—எவ்வித ஊனமும் நிகழக்கூடாது என வீறு கொண்டது அவர் உள்ளம். அதன் விளைவை,

‘சிறைகாக்குங் காப்புளவன் செய்யும்? மகளிர்

நிறைகாக்குங் காப்பே தலை.’

என்ற குறள் வடிவில் காண்கிறோம். இக்குறளுக்கு விரிவுரை காணப்புகுந்த தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள், ‘திருவள்ளுவர் பழந்தமிழர். பழத்தமிழர் நாகரிகம், களவு மணத்தை அடிப்படையாகக்கொண்டது. அவர் தம் நாகரிகத்தில் பெண்மணிகளைச் சிறை செய்து காக்கும் முறைமை இல்லை. இன்னைக் திருவள்ளுவர் கருத்துச் சிறை காக்குங் காப்பின் மீது சென்றதென்னை?

‘திருவள்ளுவர் பெண்மக்களைச் சிறை செய்து காக்கும் முறைமையைப் பிறர் வாயிலாகக் கேட்டிருத்தல் வேண்டும்; அல்லது அம் முறைமை பிறநாட்டினின்றுந் தமிழ்நாட்டில் குடி புகுந்ததைக் கண்டிருத்தல் வேண்டும். திருவள்ளுவர் காலத்திலே பிற நாட்டார் தமிழ்நாடு புகுந்ததைச் சரிதங்களிற் காண்க.

‘........ பெண்ணுரிமை காக்கப்பட வேண்டுமென்பது அவர்தம் கருத்து’ என்று தமக்கே உரிய தண்டமிழ் நடையில் எழுதியுள்ள எழுத்துக்கள் ஆராய்ச்சியாளர்க்கோர் இனிய விருந்தாகும்.