பக்கம்:உணர்வின் எல்லை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

உணர்வின் எல்லை

இனி, பொருட்பாலில் திருவள்ளுவரின் புரட்சி உள்ளத்தைக் காண்போம் :

திருவள்ளுவர் இயற்றிய முப்பாலுள்ளும் ஒவ்வொரு பாலுக்கும் உயிர்நாடியான கருத்து, அப்பாலுள்ளேயே ஒரு குறளில் மிக நன்றாக அமைந்து கிடத்தலை அறிந்து இன்புறலாம். ‘ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாய் இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை,’ என்ற மிக உயர்ந்த கருத்தைத் தன்பால் கொண்ட,

‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் ; அனைத்துஅறன் ;

ஆகுல நீர பிற.’

என்ற குறள் மொழியை முப்பாலின் முதற்பாலாகிய அறத்துப்பாலின் உயிர்நாடியான கருத்தாகக் கொள்ளலாம். இதன் விரிவே—விளக்கமே— அறத்துப் பால். இல்லாறே பொருட்பாலிலும் ஒளிமிக்க மணிக ளாக இரு குறட்பாக்கள் உள்ளன. அவை இரண்டும், ஓர் இலட்சிய சமுதாயத்தின் இரு கண்களான அரசியலும் பொருளாதாரமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நமக்கு அறிவுறுத்துகின்றன. நாட்டின் அரசியல், குடிமக்களின் கருத்துவழி இயங்கும் ஜனநாயகப் பண்பினதாய் இருக்கவேண்டும். (கோனாட்சி ஆயினும் உண்மையில்—நடைமுறையில்—அது குடியாட்சியாகவே இருக்க வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து.) அத்தகைய அரசாட்சிக்கு ஏதம் ஏதும் நேரா வகையில் பலம் பொருந்திய பொருளாதார அமைப்பு அதற்கு அரணாதல்