பக்கம்:உணர்வின் எல்லை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

உணர்வின் எல்லை

இல்லை; தலைவன் பரத்தையை நாடிச் செல்வதும் இல்லை.............அக்காலத்து நூல்களில் எல்லாம் இடம் பெற்றுவந்த பரத்தையர்க்குத் திருக்குறளில் நல்ல இடம் இல்லை; வேண்டாவென்று கடியப்படும் இடமே கிடைத்தது. ஆதலின் திருவள்ளுவர், மருதத்திணைக்கு முன்னோர் வகுத்தோதிய இலக்கணத்தையும் புறக்கணித்துப் பரத்தையர்க்குக் காமத்துப் பாலில் இடம் இல்லாமல் செய்தார்; நூலோர் மரபையே கடந்து புது வழி வகுத்தார். இதுவே நடுவு நிலை பிறழா ஆராய்ச்சி அறிஞரின் தெளிவுரை.[1]

இவ்வாறு கற்பனை உலகில்—நுழையும்போதும் புரட்சி மணம்—சீர்திருத்த மணம்—கமழ நூல் செய்த அறவோர் திருவள்ளுவர். அதனால் அன்றோ ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட’ நாடாய்த் தமிழ் நாடு விளங்குகிறது.?

முப்பது குறட்பாக்களில் மூன்று பெருந்தீமைகள் நாட்டில் பொது வாழ்வில் தலை காட்டவும் கூடாது என்று மணிமணியான கருத்துக்களை அணி பெறக் கூறி விளக்கும் திருவள்ளுவரின் உள்ளம், இன்று நம் தாய் நாட்டின் குடியரசாட்சியில் சட்டமாக உருக்கொள்ளும் காட்சியைப் பார்க்கிறோம். கள் ஒழியவும், பரத்தைமை நீங்கவும், சூது தொலையவும். இன்று அரசாங்கம்—சுதந்திர ஆட்சி—செய்யும் முயற்சிகட்கு எல்லாம் வித்திட்ட பெருமான்—


  1. டாக்டர் மு. வ.—திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்.