பக்கம்:உணர்வின் எல்லை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

உணர்வின் எல்லை

வாழ்வாயாக!’ என்று புலவர் தம் மனத்தில் ஊறி எழுந்த கருத்தைச் சுருங்கச் சொல்லிச் சுவை தோன்ற விளங்க வைப்பர்.

‘வாழிய நெடிது!’[1]

‘வாழ்கநின் ஊழி!’[2]

‘நீடு வாழிய பெரும!’[3]

‘ஆயிர வெள்ள ஆழி
வாழி யாத வாழிய பலவே!’[4]

எந்தை வாழி யாத னுங்க![5]

எனவரும் சங்க இலக்கிய அடிகள் அவர்பாலிருந்த இத் தனிச்சிறப்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். இவ்வாறு வாழ்த்த விரும்பும் புலவர் தம் தலைவரின் திருப்பெயரையும், தலைமாலையையும், தாளினையும், செல்வ வளனையும், சீர்மைசால் புகழினையும், போர்வல்ல படையினையும், பொன்றுதலில்லா வெற்றியினையும் வாழ்த்துதலும் இயல்பாகும்.

‘வாழிய பெருமதின் வரம்பில் படைப்பே!’[6]

‘வாழ்கவவன் றாளே!’[7]

‘வாழ்கஅவன் கண்ணி!’[8]

‘பல்பொறி மார்பதின் பெயர்வா ழியரோ!’[9]

  1. பெரும்பாண், 461.
  2. பதிற்றுப்பத்து; 71; 24; 98; 92; 63; 20-21.
  3. பதிற்றுப்பத்து; 71; 24; 98; 92; 63; 20-21.
  4. பதிற்றுப்பத்து; 71; 24; 98; 92; 63; 20-21.
  5. புறம். 175
  6. புறம், 22.
  7. 8, புறம், 70; 77.
  8. 8, புறம், 70; 77.
  9. பதிற்றுப்பத்து, 48; 12.