பக்கம்:உணர்வின் எல்லை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்தும் கலை

119

'சிறக்கநின் னாயுள்
மிக்குவரு மின்னிர்க் காவிரி
எக்க ரீட்ட மணலிலும் பலவே!'[1]

'தண்புனல் வாயிற் றுறையூர் முன்றுறை
நுண்பல மணலிறு மேத்தி
உண்குவம் பெரும்நீ நல்கிய வளனே!' 2

'தீம்புன லாய மாடும்

காஞ்சியம் பெருந்துறை வனவிலும் பலவே!'[2]

புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் வரும் இவ்வடிகளில் புலவர்தம் அன்பு வெள்ளமும் சேர, சோழ நாடுகளின் புகழ் சான்ற ஆறுகளின் பெரு வெள்ளமும் பின்னிப் பிணைந்து செல்லும் காட்சி நம் மனக் கண்கட்குப் புலனாகின்றன அல்லவா?

தலைவர்களை வாழ்த்தும்போது அவர்தம் மனைக்கு விளக்காகிய வாழ்க்கைத் துணைவியர்க்கு முதலிடம் தந்து வாழ்த்துதலும் பழந்தமிழ் மரபேயாம்.

'வேயுறழ் பணைத்தோள் இவளொடு
ஆயிர வெள்ளம் வாழிய பலவே!'[3]

'வண்டார் கூந்தல் ஒண்டொடி கணவ!
நின்னாள், திங்கள் அனைய வாக! திங்கள்
யாண்டோ ரனைய வாக! யாண்டே
ஊழி யனைய வாக! ஊழி

வெள்ள வரம்பின வாக!' 5

  1. 1-2. புறம். 43, 136
  2. 3. பதிற்றுப்பத்து, 48: 13-18.
  3. 4-5, பதிற்றுப்பத்து, 21 : 37, 38; 90 : 50 - 54.