பக்கம்:உணர்வின் எல்லை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியும்-பாரதியும்

5


சிற்ப முதற்கலைகள்-பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள்.”

பாடல்களைப் பாருங்கள்! பார்த்தல் மட்டும் போதாது; தனிமையாய் இருந்து இனிமையாகப் பாடிப் பார்க்கவேண்டும்; அப்பொழுதல்லவோ அருமை தெரியும் கற்பனையென்னும் பொன்மான், கவியின் நாவெனும் புலத்திலே துள்ளிக் குதித்து ஒடுகின்றது! இனி இத்தகைய வடிவுடைய வாணி வாழுமிடங்களைப் பற்றிக் கவியின் கருத்தைக் காண்போம்:

உரைமகள் உறையுமிடங்களை ஒன்று விடாமல் உரைப்பது என்பது ஒல்லாது. ஆனால், சுருங்கச் சொல்லுமிடத்து, ‘எங்கெங்கு எழிலும் இன்பமும் நிறைந்துள்ளனவோ, எங்கெங்குத் தாய்மையும் வாய்மையும் திகழ்கின்றனவோ, அங்கெல்லாம் ஆரணப்பாவை அமர்ந்துள்ளாள்,’ என்னலாம்.

வாணி வாழும் இடங்கள்

’வாணி வெண்டாமரையில் வீற்றிருப்பாள்; வீணையின் நாதத்தில் விளங்குவாள்; கவிஞர் கருத்திலும் உள்ளத்திலும் குடியிருப்பாள்; ஏட்டிலே இயங்குவாள்; மறையின்கண் பிறங்குவாள்; இருடிகள் இயம்பும் இழுக்கில் மொழியின்பால் இருப்பாள்; மாதரின் மதுரப் பாட்டிலும், மக்கள் பேசும் மழலை மொழியிலும் மிளிர்வாள்; குயிலின் குரலிலும், சிறையார் கிளியின் நாவிலும் உறைவாள்,’ என்ற இக்கருத்துக்களையெல்லாம், ஒருங்கே