பக்கம்:உணர்வின் எல்லை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருத நிலத் தலைவன்

123

நுகரும் ஊடல் இன்பம் என்றும், பாலை நிலத்திற்குரிய சிறந்த ஒழுக்கம் தலைவியை விட்டுத் தலைவன் பிரிதல் என்றும், நெய்தல் நிலத்திற்குச் சிறந்த ஒழுக்கம் பிரிந்து சென்ற தலைவனை எண்ணி எண்ணிைத் தலைவி உள்ளம் உருகி இரங்கல் என்றும் பாகுபாடு செய்தனர் பழந்தமிழ்ப் புலமையாளர்.

இவ்வாறு ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய நில இயல்பு முதலியவை முதற்பொருள் என்றும், அந்நிலத்தில் விளையும் பொருள்கள் முதலியன கருப்பொருள் என்றும், அவ்வந் நிலத்திற்குரிய ஒழுக்கம் உரிப்பொருள் என்றும் வகுத்துரைக்கப் பெற்றன.

இவ்வாறு நிலங்களுக்கென வகுக்கப்பட்ட ஒழுக்கங்களை எல்லாம் தொகுத்து உரைக்கின்றது அழகியதொரு பழம்பாடல்.

போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கஞ்சேர் ஊடல் அணிமருதம்;—நோக்குங்கால்
இல்லிருத்தல் முல்லை; இரங்கல் நறுநெய்தல்
சொல்விரித்த நூலின் தொகை
.

இவ்வழகிய பாடலின் நடுவனதாக விதந்து ஒதப்பெற்ற, ‘ஆக்கம் சேர் ஊடல் அணி மருத’த்தைப்பற்றியும், அதன் தலைவனது தன்மையைப் பற்றியுமே இப்பொழுது நாம் சிந்தித்தல் வேண்டும்.

வயலும் வயல்சார்ந்த நிலமுமாகிய பகுதிக்கு ‘மருதம்’ என்னும் பெயர் வரக்காரணம் என்ன? ஆராய்ச்சியாளர்கள் மூன்று வகையான முக்கிய காரணங்-