பக்கம்:உணர்வின் எல்லை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

உணர்வின் எல்லை


வாழ்க்கைக்குக் கூர்த்த மதி வேண்டும்; நுண்ணிய உணர்வு வேண்டும்; திண்ணிய உரிமை உணர்ச்சியும் வேண்டும். இவை அனைத்தும் மருதநில மக்களுக்குச் சிறப்பாக அமைந்த செல்வங்களென்பதை ஊன்றி ஆராய்வார் உணர்தல் ஒருதலை. வற்றாத நெல் வளம் கொழிக்கும் வண்மை சான்றது மருத நிலம். தண்ணிய நீரும் துண்ணிய மூளையை வளர்க்கும் சொற்சோறும், நெற்சோறும் வேண்டுமளவும் பெறும் மருத நில மக்கள், அறிவிலும் உணர்விலும் உரிமை வேட்கையிலும் சிறந்திருத்தல் இயல்பே அன்றாே மருதநில மக்கள் கலை உணர்ச்சி மிக்கவர்கள்; கவிதை உணர்ச்சி மிக்கவர்கள் என்ற செய்தியை மருதக்கலி ஒன்றன் அடிகள் அழகுற எடுத்தோதுகின்றன.

'செதுமொழி சீத்த செவிசெறு வாக
முதுமொழி நீராப் புலன்தர வுழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர்!

என்பது காண்க.

அடுத்து நாம் காணவேண்டுவது, தலைவன் தலைவியில் நிகழ்ந்த ஊடலுக்குக் காரணம் என்ன என்பதே. பழந்தமிழ் நாட்டு மருதத்தலைவன் செல்வச் சிறப்பில் செம்மாந்து இருந்த பெருந்தமிழன். அவருடைய வாழ்க்கையில் மிதமிஞ்சிய பொருள் வளமும், கலையுணர்ச்சியும் காரணமாகப் புகுந்ததொரு குறையே ஊடலுக்கு வித்தாய் விளங்கியது என்ற செய்தியைச் சங்க நூல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஒருவன் 'ஒருத்தி வாழ்வே காதல் வாழ்வின்