பக்கம்:உணர்வின் எல்லை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

உணர்வின் எல்லை

என்றாலும் அக்காலச் சமூக அமைப்பின் கொடுமைக்கு இரையான அவள், சற்றும் நாணமில்லாமல், உயர்ந்த பெண்மை நலமெல்லாம் இழந்து நடந்து கொள்ளும் போக்கை, அகத்திணை இலக்கியம் காட்டுகின்றது. தலைவனோடு உறவு கொண்டிருந்து, அவன் உள்ளத்தையும் பொருளையும் உறிஞ்சும் இறுமாப்பு, அவளுக்கு எப்போதும் உண்டு.

யாருடைய பழிச்சொல்லையும் மதிக்காத மனம் உடைய அவள், ஒருநாள் தன்னைத் தலைவியும் தோழியும் பழித்துப் பேசினர் என்று கேள்வியுற்றாள்; ஆற்றொணாச் சினங்கொண்டாள். அப்போது அவள் பேசிய பேச்சு, அவள் அஞ்சா மன இயல்பைக் காட்டும். தன்பால் வந்து மதியையும் நிதியையும் இழந்து விட்டுப்போகும் தலைவனைப்பற்றி அவள் கொண்டிருந்த எண்ணங்களைப் புலப்படுத்தும் முறையில் அவள் முழங்கினாள்.

அஞ்சியஞ்சி வாழ்கின்றான் இந்தத் தலைவன். தடம் பொய்கையில் இரை விரும்பி எழுந்த பெரிய வெள்ளிய ஆண் வாளைமீனை உண்ணவேண்டும் என்று முயலும் நாரை, அஞ்சி யஞ்சி மெல்ல மெல்லத் தளர்ந்து நடக்கும். காவலுள்ள வீட்டில் கள்ளன் மெல்ல மெல்ல அடியெடுத்து வைப்பான். அத்தகைய ஊரனின்—மருதத் தலைவனின்—உறவு காரணமாக இனி எனக்கு ஆவது ஆகட்டும். நாணம் எதற்கு? அந்தத் தலைவன் எங்கள் தெருப்பக்கம் வரட்டும்; ‘அவனுடைய பெண்டிர் பார்க்கும்படி அவன் மாலையையும் ஆடையையும் பற்றி ஆரியர்-