பக்கம்:உணர்வின் எல்லை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருத் நிலத் தலைவன்

135

கள் பழக்கி வைத்த பெண்யானை ஆண்யானையைப் பிடித்துத் தருவது போல, என்தோளே கட்டுத்தறியாக, என் கூந்தலைக் கொண்டு கட்டி, அவன் மார்பைச் சிறைப்படுத்துவேன்!’ என்றாள்.

எப்படிப் பரத்தையின் பேச்சு! செல்வ வளம் காரணமாக, கலை உணர்ச்சி காரணமாக, இப்படிப்பட்டவள் கையில் சிக்கிக்கொள்வதும், பின்னர்க் கற்புடைய தலைவியின் பொற்பாலும், அன்பாலும் மீண்டும் உய்தி பெறுவதுமே மருதத்தலைவனுக்குரிய சிறப்பியல்களாய் விளங்கி வந்திருக்கின்றன.

ஐங்குறு நூறு என்னும் அழகிய அகப்பொருள் இலக்கியத்தின் முதல் நூறு, மருதத்திணையை அடிப்படையாகக் கொண்டது. ஆசிரியர் ஓரம் போகியார் அதன்கண் யாத்துள்ள ஒரு நூறு பாடல்களுள் அழகியதொரு மணியை மட்டும் ஈண்டுக்காண்போம். ஓரம் போகியார் தம் பாடலில் சங்க இலக்கியத்துக்கே தனிச்சிறப்பாக அமைந்த உள்ளுறை ஒன்றைச் செவ்விதின் கையாண்டு கவிதை பாடியுள்ள திறம் எண்ணி எண்ணி இன்புறற்குரியது. பரத்தைமையாகிய தீயொழுக்கத்தின்பாற்பட்ட தலைவனை நோக்கித் தோழி கூறுவதாக ஆசிரியர் அப்பாடலை அமைத்துள்ளார். தோழி பேசுகின்றாள்:

‘பூத்துப் பயன்படாக் கரும்பினையும், காய்த்துப் பயன்படும் நெல்லினையும் உடைய ஊரன் மார்பு, ஊரவர்க்கெல்லாம் பொதுவாகிய பழனம் போலாது