பக்கம்:உணர்வின் எல்லை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருத நிலத் தலைவன்

137

கண்டதும் அவரை அழைத்துக்கொண்டு தலைவன் மனையுள் புகுந்தான், ‘விருந்தினரை இன்முகன் கொண்டு வரவேற்க வேண்டும் ; குடும்பத்திலுள்ள குழப்பத்தைப் புலப்படுத்தாமல் ஒழுகவேண்டும்,’ என்பதைக் கடமையாக உணர்த்தவள் தலைவி; ஆதலின், வந்த விருந்தை வரவேற்று ஊடலை மறந்து முகமலர்ந்து இன்சொல் பேசித் தன் கடமைகளைச் செய்யலானாள்.

இவ்வாறு அன்புருவாகத் தன் தலைவி மாறியதைக்கண்ட தலைவன், ‘இத்தகைய விருந்து மேன்மேலும் வந்து ஊடல் தணித்து மகிழ்விக்க வேண்டும்!’ என்று விரும்பினான். அவன் சொன்னான், ‘என்னிடம் ஊடல் கொண்டிருந்தும் இவ்வாறு சமையலறையில் கடமையில் முனைந்திருக்கிறாள் தலைவி; இத்தகைய நிலையை ஏற்படுத்தி உதவிய விருந்து எனக்கு அடிக்கடி வர விரும்புகிறேன்; இவ்வாறு வந்தால் ஊடலால் சினம் கொண்ட கண்கள் சிவப்பு இல்லாமல் மறைந்து சிறிது கூரிய பற்கள் தோன்றப் புன்முறுவல் கொண்டதான காதலியின் முகத் தைக் காணப்பெறுவேன்!’ என்று.

மருதத்திணை ஊடல் ஒழுக்கம் பற்றியது என்பதை நாம் அறிவோம். அவ்வூடல் பரத்தையின் பிரிவு காரணமாக நிகழும் காட்சியையே, பெரும்பாலான அகத்திணை—இலக்கியங்கள்—சங்க நூல்கள்—நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இது குறித்துப் பேரறிஞராகிய டாக்டர். சாமிநாத ஐயர் கூறும்