பக்கம்:உணர்வின் எல்லை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

உணர்வின் எல்லை

விட்ட போது எனக்கு உண்டான இன்பத்தையான் ஒரு போதும் மறக்க இயலாது![1]

அன்றாட வாழ்க்கையில் நாம் ஒழுக்க நெறியில் நிற்க இலக்கியம் பெருந்துணை புரிகிறது. அறிந்தோ அறியாமலோ நாம் தவறு செய்யும் போது நம்மைத் தடுத்து நிறுத்தவும், ஒரோவழித் தவறிழைத்த பின் அதை நினைந்து உருகிக் கரைந்து அழுது, ‘இனி அவ்வாறு செய்யோம்’ என்று உறுதி கொள்ளவும் துணை புரியவல்ல ஆற்றல் இலக்கியத்துக்கு இருப்பது போல வேறெதற்கும் இல்லை. என்றே சொல்ல வேண்டும். இது ஒருபுறம் இருக்க, திருக்குறள் போன்ற பெருநூல்களிற் காணும் பலப் பல மணி மொழிகட்கும் உரிய உண்மைப் பொருளை நம் அன்றாட வாழ்க்கையும், அதில் அலைமோதும் உணர்ச்சிகளும், நிகழ்ச்சிகளுயே அவ்வப்போது விளக்கி வைக்கின்றன. அத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம் ‘அன்றாட வாழ்க்கையைப்போல—அனுபவத்தைப் போல—சிறந்த உரையாசிரியன் இல்லை’ என்றே நாம் எண்ணமிடத்தோன்றுகிறது.


  1. When literature is the sole business of life, it becomes a drudgery. When we are able to restore to it only at certain hours, it is a charming relaxation. In my earlier days I was a banker’s clerk, obliged to be at the desk every day from ten till five’ O clock; and I shall never forget the delight with which, on returning home, I used to read and write during the evening.”—Rogers.