பக்கம்:உணர்வின் எல்லை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்றாட வாழ்வில் இலக்கியம்

149

அன்றாட வாழ்க்கையில் இலக்கியத்தை உணர்ந்து இன்பமும் பயனும் எய்தக்கூடிய வாய்ப்புப் பல நம் சமுதாயத்தில் அதன் இயற்கையை ஒட்டியே அமைந்துள்ளன. சான்றாக. இரவு நேரங்களில் ஊர்ப்புறங்களின் அமைதியான சூழ்நிலையைக் கிழித்துக்கொண்டு எழும் பண்டாரத்தின் குரலையும், அவன் பாடும் அரியபாடல்களின் உயரிய கருத்துக்களை எண்ணி நாம் உருகும் உருக்கத்தையும் நினைவுகூரலாம். அவ்வாறே நம் வீட்டில் பேசும் பொற்சித்திரமாகவுள்ள ஆருயிர்க் குழந்தை தன் அமிழ்தினும் இனிய மழலை மொழிகளில் பாடும் நிலாப்பாட்டையும், கிளிப்பாட்டையும், யானைப்பாட்டையும் எண்ணிப்பார்க்கலாம்.

முன்னர் எத்தனை முறை கேட்டிருப்பினும் தினம் தினம் நம் தேமொழியிடம், ‘அம்மா ஒரு பாட் டுச் சொல்லு’ என்று நாம் மீண்டும் மீண்டும் கெஞ்ச, அந்தத் தெய்வக் குழந்தை,

‘நிலாநிலா வாவா, நில்லாமல் ஓடிவா,
மலைமேலே ஏறிவா, பல்லிகைப்பூக் கொண்டுவா,

நடுவீட்டில் வையே, நல்லதுதி செய்யே.

எனவும்,

‘பச்சைக் கிளியே வாவா, பாலும் சோறும் கொண்டுவா,

சின்னப் பாப்பாவுக்கு ஊட்டு, சிரிக்கச் சிரிக்கப் பேசு’

எனவும்,

‘யானை, யானை, அழகு யானை,

அழகரும் சொக்கரும் ஏறும் யானை,’