பக்கம்:உணர்வின் எல்லை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

உணர்வின் எல்லை

கட்டுக் கரும்பை பறிக்கும் யானை,
காவேரித் தண்ணியைக் காக்கும் யானை
குட்டி யானைக்குக் கொம்பு முளைத்தால்

பட்டண பொல்லாம் பறந்து ஓடும்.’

என்று ஆடியும் பாடியும் சொல்லும்போது, தாயும் தந்தையும் உற்றாரும் மற்றரும் அடையும் இன்பத்திற்கு ஓர் எல்லையுண்டோ ?

பண்டாரத்தை நினைத்தோம்; பாடும் பைங்கிளிகளை நினைத்தோம். நம்மையே நாம் ஏன் மறந்து விடவேண்டும்? தனித்திருக்கும் போது நம் உள்ளத்து உணர்ச்சிகட்கு ஏற்ப நாம் கற்ற கவிதைகள் நம் உள்ளத்திலும் உதட்டிலும் ‘ரீங்காரம்’ செய்வதை எத்தனையோ முறை கண்டிருக்கிறோம்; கேட்டிருக்கிறோம். அம்மட்டோ! நண்பர்களோடு விருந்து உண்ணும்போது மோரைப்பார்த்ததும் ஒரு தனிப் பாடல்—துவையலைப் பார்த்ததும் இன்னொரு தனிப்பாடல்—சோற்றில் கல்லைக் கண்டதும் வேறொரு தனிப் பாடல்—இவ்வாறு வகைவகையாக நாம் சொல்லி மகிழ்வதும் உண்மையே அன்றே? அவ்வளவோடும் நிற்கிறோமா! ‘பச்சைமா மலை’ என்ற பாட்டிற்கும் ‘பூரியார் கண்ணும் உள’ என்ற குறள் மொழிக்கும் புதுப் புதுப் பொருள் விரிப்பதில்லையா! மேலும், எத்தனை எத்தனை பழமொழிகளை அடுக்கடுக்காய் வழங்குகின்றோம் ? அவையெல்லாம் சிறந்த இலக்கியமே அன்றோ ?

அன்றாட வாழ்வில் பழைய இலக்கியங்களைப் போற்றுவதோடும் நம் முயற்சி நிற்பதில்லை. காலத்-