பக்கம்:உணர்வின் எல்லை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

உணர்வின் எல்லை

ஆக்கும் சக்தியையும் குழந்தைகளின் வாழ்விலேயே ஞானக் கவிஞன் கண்டு பாடும் பாட்டின்பத்தைச் சிற்றிற் பருவத்தில் சிறப்புறக் காணலாம்.

பழனிப் பிள்ளைத் தமிழில், ‘சிற்றில் பருவத்’தில், வரும் அழகியதொரு பாடல் நம்மை ஓர் அற்புத உலகிற்கு அழைத்துச் செல்கிறது. அந்தக் குட்டி உலகம்—குழந்தை உலகம்—தெய்வ உலகம்! அதில் என்ன தான் நடைபெறாது! தெய்வக் குழந்தைகள் செயலே தெய்வீகமானது தான்! சின்னப்ப நாயக்கர் காணும் அப் பெண்குழந்தைகள் சிறுவீடு கட்டிச் ‘சமையல்’ செய்கிறார்கள்! அரிசி, முத்து,... பருமுத்து! அதை நன்றாக ஆய்ந்து கழுவுகிறார்கள்; அதற்கு நீர்? ஆம்! நாமானால் தண்ணீர் விடுவோம். முருகனோடு விளையாடும் குழந்தைகளோ நீருக்குப் பதில் தேனையே விடுகின்றன! ஆம்—தேன்—பசுந்தேன்! தேனில் வடித்த முத்தரிசியை உலையில் ஏற்றுகிறார்கள். மண் பானையா? இல்லை! இல்லை! பவழக் குடத்தில்! இப்படி உப்பேறிய பானையில் பதம் பெற்ற சோறே பாற்சோறு! சோற்றுக்குக் கறி!—உண்டு; பூந்தளிர்க் கறி! சோறு சமைத்துக் கறி ஆக்கிவிட்டால் போதுமா? அந்தப் பெண்கள் தெய்வப் பெண்கள்! தெய்வத் தமிழ்ப் பெண்கள்! விருந்து போற்றும் பெருமை அவர்கள் தனி உரிமை! எனவே, செல் விருந்தோம்பி வருவிருந்து பார்க்கிறார்கள்! அப்படிப்பட்ட பெருமை மிக்க மகளிர் பிரியத்துடன் கட்டியவீடு மண்வீடா—இல்லை பின்னர்?–பளிங்குவீடு! சிறிய பெண்கள்—பெரிய உள்ளம்! பெரியவீடு! அந்த