பக்கம்:உணர்வின் எல்லை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் குழந்தை

163

வீட்டை எட்டி உதைத்துக் குறும்பு செய்ய எழுந்து வருகிறான் முருகன், தன்னைப் பிடிக்கும் அப்பெண்களுக்கு! அவன் அருமைச் சிறு கிண்கிணிக்காலும் அவர்களுக்கு உயிரினும் இனிது! ஆனால், அவன் செய்யும் தொழில்தான் பிடிக்காது! இதோ திருமுருகனை—அவன் அருமைக்கிண்கிணிக்காலை—அக்காலுக்கு அஞ்சி அடிபணிந்து வேண்டும் பக்தி உள்ளங்களைத் தரிசிக்கக் ‘கதவம் திறந்து’ வழி காட்டுகிறது சின்னப்ப நாயக்கர் பாடல்!

பருமுத் தரிசி தனையாய்த்து
     பசுந்தே னதனை வடித்தெடுத்துப்
பவழக் குடத்தில் உலையேற்றிப்
          பரிவு தருப்பாற் சோறாக்கி
ஒருமைப் படியே பூந்தளிரை
     ஒன்றாய்ப் பறித்துக் கறிசமைத்தே
          உண்ணும் படிக்கிங் குபசரிக்கும்.
உரிமைப் பருவத் திளங் கோதைப்
     பெருமை மடவார் நாங்களின்று
          பிரியத் துடனே வெண்பாளிங்காற்
பிரியா வகைக்குக் கட்டுவித்த
     பெரிய மனையெம் மனையுன்றன்
          அருமைச் சிறுகிண் கிணிக்காலால்
ஐயா சிற்றி லழியேலே!
     அமலா! பழனிச் சிவகிரிவாழ்

          அரசே சிற்றி லழியேலே!

5

மறுமலர்ச்சி இலக்கியத்தின் மகாகவி பாரதியார். அறிவுடை நம்பி போல் அவர் குழந்தையையும் பாடி