பக்கம்:உணர்வின் எல்லை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. ஏழெயில் வென்ற இணையிலா வீரம்

முத்துடைப் பாண்டி நாட்டை முடிசூடி ஆட்சி புரிந்து வந்த தென்னவன், சோழன் நலங்கிள்ளி யின்மீது படையெடுத்துத் தன் வலி காட்டிப் புகழ் மேவ மனம் துணிந்தான். ஒற்றர் வாயிலாக இச் செய்தி அறிந்தான் சோழவேந்தன், அவன் கண்கள் சிவந்தன ; தோள்கள் விம்மின; உதடுகள் துடித்தன ; உள்ளம் குமுறியது. ஆற்றெணாச் சினத்துடன் ஆனைகள் பிறப்பித்தான். இடியென முரசதிர்ந்தது. நீங்கா மறத்தின் வீங்கு தோள் வீரர்கள் அணிவகுத்தனர். ‘பார் பெருத்தலில் படை சிறுத்ததோ, படை சிறுத்தலில் பார் பெருத்ததோ?’ எனக் கண்டவர் மயங்கிக் கலங்கும் வண்ணம் நால்வகைப் படைகளும் நானிலத்தின் புறம் வளைய ஒருங்கு திரண்டன. செருவேட்டுச் சிலைக்கும் செங்கண் ஆடவர், ‘நலங்கிள்ளி வாழ்க!’ என்று நாற்றிசையும் அதிர முழங்கிய ஆர்ப்பொலி, முந்நீர் முழக்கத்தினும் பன்மடங்கு பெரிதாய் விளங்கியது. கருங்கண் மறவர் படையும் தானைத் தலைவரும் புடைசூழ, நலங்கிள்ளி தென்னவன் திசை நோக்கிக் கண்கள் தீயாகக் காற்றெனக் கடுகிப் புறப்பட்டான். செய்தியறிந்தான் பாண்டியன் ; ஒற்றர்கள் வாயிலாக மாற்றாரின் படை வலியை ஒருவாறு உணர்ந்தான். தன் தவறு அறிந்தான். எனினும் மானம் துரப்ப, மறப்போர் நிகழ்த்தத் துணிந்தான். வள-