பக்கம்:உணர்வின் எல்லை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

உணர்வின் எல்லை

பாசறை யல்லது நீயொல் லாயே
நுதிமுக மழுங்க மண்டி ஒன்னுர்
கடிமதில் பாயுதின் களிறடங் கலவே
போரெனிற் புகலும் புனைகழன் மறவர்
‘காடிடைக் கிடந்த நாடுநனி சேய
செல்வே மல்லேம்’ என்னுர் கல்லென்
விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் நிறுத்துக்
குணகடல் பிண்ணதாகக் குடகடல்
வெண்டலப் புணரிநின் மான்குளம் பலைப்ப
வலமுறை வருதலு முண்டென் றலமந்து
நெஞ்சுநடுங் கவலம் பாயத்

துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே.’[புறம்–31]

என்பது அவர்தம் பாடல். இப்பாடலால் நலங்கிள்ளியின் வீரம் விளங்குதலே போன்று, ‘அறம்—பொருள்—இன்பம்’ என்னும் முறைவைப்பு சிறப் புடை மரபு என்னும் வாய்மையும் அழகுற விளங்கு கின்றதன்றாே?


வாழ்க தமிழ்வீரம் !

வெல்க பழந்தமிழ் மரபு !!