பக்கம்:உணர்வின் எல்லை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

உணர்வின் எல்லை

சங்க நூல்களில் சிறப்பிடம் பெற்றிருந்த பாட்டாளி மக்களுள் தலைமை சான்றவர் உழவர் பெருமக்களே. உழவின் உயர்வையும் ஏரின் ஏற்றத்தையும் இன்று போல்—ஏன் இன்றையினும் சிறந்த முறையில்—அன்றைய தமிழர் சமுதாயம் உணர்ந்து போற்றியது.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம் என்பார்க்கும் நிலை.

உலகம் பல தொழில்செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. உழவு செய்ய முடியாமல் மற்றத் தொழிலைச் செய்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர். உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர். உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர். மற்றவர் எல்லோரும் பிறரைத்தொழுது உண்டு.