பக்கம்:உணர்வின் எல்லை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

உணர்வின் எல்லை

மலை நிலத்துக் குறமகள் பாட்டாகத் தொடங்கிய குறத்திப்பாட்டு, ‘குறமாய்’ ‘குறவஞ்சி’யாய்ப் பின்னாளில் உருக்கொண்டது. உழவர் மகள் பாட்டாய் உதித்த உழத்திப்பாட்டும் அவ்வாறே பள்ளாய் மலர்ந்தது. இவ்விருவகை இலக்கியங்களுமே தமிழ் மொழியில் உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த மக்கள் இலக்கியங்கள் (people literature) ஆகும்.

பள்ளுப் பிரபந்தங்களுள் தலைமை சான்ற முக்கூடற்பள்ளினை மனத்தில்கொண்டு இருநூறு ஆண்டுகட்கு முன் சதுரகராதி செய்த வீரமாமுனிவர் தம் அகாரதியில் மூன்றாவதாகிய தொகையகராதியில் 320-22 பக்கங்களில் ‘உழத்திப்பாட்டு’ என்னும் தலைப்பில் தந்துள்ள குறிப்பு, பள்ளுப் பிரபந்தத்தின் நோக்கையும், போக்கையும் நன்கு விளக்கும் நலம் உடையது. இத்தாலிய நாட்டுத் துறவியர் பெருமகனும், தமிழ்ப் பேராசானும், தேம்பாவணி பாடிய கவிஞர் பிரானுமாகிய வீரமாமுனிதன் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது முக்கூடற்பள்ளு. பள்ளு நூல்களுள் எல்லாம் சிறந்த அப்பள்ளு நூலில் உள்ள எல்லாப் பாடல்களிலும் சிறந்ததொரு பாடல்வருமாறு:

மழைக்குறி

ஆற்று வெள்ளம் நாளை வரத்தோற்று தேகும்—மலை
        யாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே
தேற்று மின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதெ—கேணி

        நீர்ப்படு சொதித் தவளை கூப்பிடுகுதே