பக்கம்:உணர்வின் எல்லை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

உணர்வின் எல்லை

பதிப்பாக ‘திருமலை முருகன் பள்ளு’ வெளியிடப் பெற்றுள்ளது. இரண்டாண்டுகட்கு முன் 1957-இல் செந்தமிழ் ஞாயிறு திரு. சேதுரகுநாதன் அவர்கள், ‘முக்கூடற் பள்ளு’ நூலை அரிய ஆராய்ச்சி முன்னுரையுடனும், பயனுடைய புதிய குறிப்புக்களுடனும் வெளியிட்டுள்ளார்கள். இந்நூல்கள் எல்லாம் சிறந்த முறையில் வெளிவரற்கு நேராகவும், மறைமுகமாகவும் துணை புரிந்த பெரியார், காலஞ்சென்ற தமிழ்ப் பேராசிரியர் திரு. எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள். இவ்வுண்மை மேற்குறிப்பிடப் பெற்ற பதிப்புக்களின் முன்னுரைகளைப் படிப்பார்க்கு எளிதின் விளங்கும். மேலும் பள்ளுப் பிரபந்தங்களைப் பற்றிய சரியான வரலாறும் கண்ணோட்டமும் அமைவதற்குப் பெருந்துணை புரிந்தது. திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள் 1932-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற ‘குருகூர்ப்பள்ளு’க்கு வரைந்துள்ள சிறந்த முன்னுரையே என்றால் மிகையாகாது.

இந்நாள்வரை அச்சில் வெளிவந்துள்ள தமிழ் நூல்களைப்பற்றியும் அச்சேறாது துயின்று கொண்டு இருக்கும் தமிழ் இலக்கியங்கள் பற்றியும் எவரும் சரியானதொரு பட்டியலை முழுமையாகத் தயாரிக்கவில்லை. அதனால் பல்வேறு உண்மைகளை நாம் அறிந்து கொள்ள இயலாமல் தவிப்பது போன்றே, தமிழில் உள்ள பள்ளுப் பிரபந்தங்கள் பற்றியும் நாம் முற்ற உணர முடியவில்லை. ‘முக்கூடற்பள்ளு’க்கு திரு. மு. அருணாசலம் அவர்களால் எழுதப் பெற்றுள்ள அரிய ஆராய்ச்சி முன்னுரையால் 23 பள்ளு