பக்கம்:உணர்வின் எல்லை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

உணர்வின் எல்லை

ஞான விளக்க அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. விரோதிகிருது ௵ வைகாசி ௴ 22’

இக்குறிப்பால் விளங்கும் உண்மைகள் பல: அவற்றுள் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது, இந்நூல் வெளியான ஆண்டாகிய விரோதிகிருது ஆண்டு. அறுபது ஆண்டு வட்டத்திற்குள் இருப்பின் கி. பி. 1911 ஆண்டாகவோ; அறுபது ஆண்டு வட்டத்திற்கு அப்பாற்பட்டதாயின் கி. பி. 1851 ஆம் ஆண்டாகவோ கொள்ளலாம். அடுத்தது, இந்நூலுக்குரிய பாட்டுடைத் தலைவர்கள் பொய்கைப் பாக்கத்தைச் சார்ந்த சின்னண்ண முதலியார், அவர் இளவல் நல்லண்ண முதலியார் என்னும் உடன்பிறப்பாளர் இருவர் என்பது. இவ்விருவரைப்பற்றியும் நூலுள்ளே பல பாராட்டு மொழிகள் பகரப்பெற்றுள்ளன. சுரப்புச் செய்யுட்களோடு சேர்ந்து 18 பாடல்களையுடைய இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் இவ்விரு சகோதரர்கள் பற்றிய புகழ் மொழிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், மூத்தவராகிய சின்னண்ண முதலியாரைக் காட்டிலும் ‘அவர் கனிஷ்டர்’ நல்லண்ண முதலியார், சிறந்த கல்வியறிவாளர் என்பதும், புலமை நலம் பொருந்தியவர் என்பதும் பொய்யா மொழியீஸ்வரர் பேரில் பாடிய ‘நற்றாய் நன்மொழி’ அவர் படைத்த இலக்கியம் என்பதும் விளங்கும். அடுத்து இவ்விரு முதலியார்களையும் போற்றும் வகையில் எழுந்த ‘மோகனப் பள்ளின்’ ஆசிரியர் கும்பகோணம் மடத்தைச் சார்ந்தவர் என்பதும்; அவர் பெயர் தத்துவலிங்கையர் என்பதும் பெறப்-