பக்கம்:உணர்வின் எல்லை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மோகனப் பள்ளு

183

படும். ‘கும்பகோணம் படம்’ என்பதனாலும், தத்துவலிங்கையர் என்ற பெயராலும், நூலினுள் ‘வீர சைவாளுடன் சைவர்க்கும்’' என வரும் குறிப்பாலும் நூலாசிரியர் வீரசைவ மரபினர் என்பது விளங்கும். மோகனப் பள்ளின் பாட்டுடைத் தலைவரே பாடிய நூல் ‘நற்றாய் நன்மொழி’ ஆதலின், இவ்விரு சிறு நூல்களும் ஒன்றாய் அச்சேற்றப்பட்டன போலும்.

மோகனப்பள்ளு மொத்தம் 18 பாடல்களைக் கொண்ட சிறு நூல். அப்பாடல்கள் முறையே தெரிவிக்கும் செய்திகள் வருமாறு,—

1. காப்பு—விநாயகர் வணக்கம்—2 (2) தெய்வ வணக்கம்—1 (3) வெள்ளச்சிறப்பு—1 (4) மீன் சிறப்பு—1 (5) குண்டைச் சிறப்பு—1 (6) நெற்சிறப்பு—1 (7) விதைச்சிறப்பு—1 (8) உழவர் சிறப்பு—1 (9) உழத்தியர் சிறப்பு—1 (10) உழத்தியர் வார்த்தை யாடல்—1 (11) விபசார தண்டனை—1 (12) பள்ளர்கள் வெறியாட்டு—3 (13) அறுப்பறுத்தற் சிறப்பு—3.

மோகனப்பள்ளு அளவால் சிறியது; ஆயினும் தமிழ்ச்சுவையால் சிறந்தது. இதன் தன்மை கருதியே இப்பள்ளு ‘மோகனப்பள்ளு’ என்று பெயர் பெற்றது என்று கருத வேண்டியுள்ளது. பெயர்கள் சிறப்புக்கு ஏற்ப, ‘மோகனப்பள்ளு’ சொற் பொருட் சுவை நிரம்பிய நூல். இந்நூலின் சிறப்பை, இந்நூல் எழுந்த காலத்தைக் கருத்திற் கொண்டே அளவிட்டுக் களிக்கவேண்டும். எளிய சொற்களையும் இனிய