பக்கம்:உணர்வின் எல்லை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

உணர்வின் எல்லை

ஓசையையும், அழகிய கற்பனைகளையும், அரிய கருத்துக்களையும் கொண்ட நூல் ‘மோகனப் பள்ளு., இந்நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் ஒரே சீராக’ எளிய இனிய நடையுடன் அசைந்து ஆடிச்செல்லும் அழகு, பள்ளுப் பிரபந்தங்களுள் இந்நூலுக்கு வாய்த்த தனிச்சிறப்பு என எண்ணத்தோன்றுகிறது. ‘முக்கூடற்பள்ளு’ப்போன்ற நூல்களில் பல பாடல்களில் சொல்லப்படும் கருத்தை ‘மோகனப் பள்ளு’ ஆசிரியர் ஒரு பாடலிலேயே சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் அழகை எண்ணும்போது, ‘மோகனப் பள்ளு, பள்ளு நூல்களின் சாறு’ என்று போற்ற நம் மனம் விழைகிறது.

இந் நூலில் உள்ள 18 பாடல்களின் நலத்தையும் ஆராய்ந்து இச்சிறு கட்டுரையில் விளக்கல் இயலாததொன்று. எனினும் அழகியதொரு பாடலை—நூலின் முதற் பாடலை—ஈண்டுக்காண்போம்.

ஆற்றில் வெள்ளம் வருகிறது. அந்த வெள்ளச் சிறப்பைப் பார்த்துப் பள்ளர் உள்ளம் துள்ளிக் குதிக்கிறது. ஆற்றின் வெள்ளத்து அழகையும், அதை அனுபவித்து மகிழும் பள்ளர் உள்ளத்து அழகையும் தத்துவலிங்கையர், சமரச வெள்ளம் கவிதைக் கரை பாண்டு பாய்ந்தோடப் பாடும் அழகே அழகு முன்னர்த் தோன்றிய பள்ளுப் பிரபந்தங்களில் ‘வெள்ளச் சிறப்பை’ வருணிக்கும் புலவர் மரபை ஒட்டியே பாடுகிறார் தத்துவலிங்கையர். என்றாலும், நீர் நிறைந்த காவிரியில் புது நீராடல்