பக்கம்:உணர்வின் எல்லை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மோகனப் பள்ளு

185


போன்ற பூரிப்பு, மோகனப் பள்ளின் முதற்பாடலைப் படிக்கும் போது ஏற்படுகிறது. பாட்டின் முற்பகுதி பாட்டுடைத் தலைவன் பெருமை பேசுகிறது. பிற்பகுதி ஆற்று வெள்ளம் தோன்றிக் காடுமேடு நாடெல்லாம் சுற்றிக் கடலில் அடங்கும் காட்சியைக் கவினுறக் காட்டுகிறது. குறிஞ்சியில் பிறந்த வெள்ளம் - குமரவேள் பதம் பரவிப் புறப்பட்ட வெள்ளம்-முல்லையிலும், பாலையிலும், மருதத்திலும், நெய்தலிலும் பாயும் காட்சியும், அவ்வாறு நால்வகை நிலங்களிலும் பாயும்போது அந்நாவ்வகை நிலத்துத் தெய்வங்களையும் பரவிப்பாயும் அழகும் புலவர் பெருமானால், அழகொழுகும் கவிதையாக எழுதிக் காட்டப் பெறுகின்றன. இதோ அந்தப் பாடல்.

வெள்ளச் சிறப்பு

முகிலை நிகர்க் கரத்தினான்-மலர்ச் சரத்தினான்-சிவன் வரத்தினான்
மூதறி வாலுயர் கருத்தினான் -புக ழிருத் தினான்-சத்திருத்தினான்
நகபுயன் கனதியாகியான் பிறர் நாரியர் பால்மனம் மோகியான்
நல்லா னாங்கூர் வல்லான் சின்னணன் நல்லண நாடு தழைக்கவே,
மிகவுங் கடலை யடுத்தே-அதின் வெள்ள நீரைக் குடித்தே
மின்னிக் குமுறி யெழுந்தே-புயல் மேற்றிசை மலையிற் பொழித்தே
அகலக் குறிஞ்சி தேடிபே-வெள்ளம் அருட்கு கன்பத நாடியே
ஆயர் பாடியை நிரவியே-அதி லரிபொற் றானைப் பரவியே
புகலும் பாலையைத் தாண்டியே -எட்டுப் புயக்கோற் றவ்வையை

வேண்டியே