பக்கம்:உணர்வின் எல்லை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

உணர்வின் எல்லை

மாதமோர் நான்காநீர்—அன்பு

வறுமையி லேயெனை ஆழ்த்திவிட்டீர்.’

என்று கூறுகின்றார்.

பின்னர்த் தாயை,

.... ......“என்றன்
பாவ மெலாங் கேட்டு ஞான கங்கை
தாத மொடேப் பொழுது—என்றன்

நாவினிலே பொழிந்திட திரைப்படும்.”

என்று வேண்டுகிறார்.

தாயும் தனயரும் ஒருங்கே கூடி இன்ப அன்பு வெள்ளத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். அளவு கடந்த இன்பம் அனுபவிக்கும் ஒருவனுக்கு, ‘இன்பம் அனுபவிக்கும் நம்மைத் துன்பம் வந்து தாக்குமோ!’ என்ற பயம் உள்ளுற இருப்பது இயற்கையல்லவா? அதனாலேதான் பாரதியார்,

‘அண்மையி விருந்திடுவீர்—இனி

அடியேனைப் பிரிந்திடில் ஆற்றுவனோ?’

என்றார்.

பின்னர்த் தாயைப் பரிந்து நோக்கி,

இனங்கள் போக்கிடுவீர்—நல்ல

     ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்,

என்று வேண்டுகிறார். இறுதியாகப் பாரதியார் தாம் செய்த பிழைகளையெல்லாம் மறந்து, தம்மை மறவாது இருக்குமாறு வேண்டுகிறார். முன்போலத் தாயை மறக்கவில்லை என்று உறுதி கூறுகின்றார்.