பக்கம்:உணர்வின் எல்லை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

உணர்வின் எல்லை

பாடலம் தன்னோடு பன்மலர் விரிந்து
குருரும் தனவரும் கொழுங்கொடி முசுண்டையும்
விரிமலர் அதிரலும் வெண்கூட தாளமும்
சூட்சமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணத்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிலடந்துசூடி போகிய அகன்றேத் தல்குல்
வாலுகம் குவைஇய மலர்ப்பூந் துருத்திப்
பால்புடைக் கொண்டு பன்மலர் ஓங்கி
எதிரெதிர் விளங்கிய கதிரின் வனமுலை
கரைநின் றுதிர்த்த கவிரிதழ்ச் செவ்வாய்
அருவி முல்லை அணிநகை யாட்டி
விலங்குநிமிர்த் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிறற் கூந்தல்
உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி.'

(சிலம்பு-13; 151-170)

இவ்வையை ஆற்றின் வடகரைக்கு வந்து சேர்ந்தனர், கோவலனும் கண்ணகியும். கருணை மறவனுக்கும், கற்புச்செல்விக்கும் நேர இருக்கும் தீங்கை நினைந்தாள் முக்காலமும் உணர்ந்த மூதறிவாட்டியாம் வையை! தன்னை ஒத்த தமிழ் மகளுக்கு-கற்பரசிக்கு-நேர இருக்கும் துயரை நினைந்தபோது அவள் 'நெஞ்சு பொறுக்கவில்லை! அவள் கயல் விழிகளில் கண்ணீர் வெள்ளம் பெருகிற்று. ஆனால் 'விருந்தினரா'ய் வருவோர் திடுக்குறும் வண்ணம் அவள் தன் கண்ணீரைக் காட்டிக் கொள்ள விரும்ப