பக்கம்:உணர்வின் எல்லை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20. இளங்கோ கூறும் ‘என்கதை’

தத்தம் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களைத் தாம்தாம் பாடும் பாடல்களிலேயே பொதிந்து வைக்கும் பயன் செறிந்த பண்பைப் பழந்தமிழ்ப் புலவர்கள் பலரிடமும் காண்கிறோம். ஆயினும் காவியச் சுவையோடு கலந்து தம் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பைப் பாடும் பெருமையை முதன் முதலாகப் பெற்றபேறு இளங்கோ அடிகள் பெற்ற தனிப்பேறு. இளங்கோ கூறும் ‘என் கதை’ அவர் படைத்த அழியாப் பேரிலக்கியத்தின் இறுதியில்—வஞ்சிக் காண்டத்து—‘வரந்தரு காதை’யின் முடிவில் அமைந்துள்ளது. இழையோடு இழையை இழைத்துவிடும் நெசவாளிபோல, தன் பாட்டுடைத் தலைவியின் கதையோடு, கதையாய்த் தன் வரலாற்றைக் கவிதைத் தறியில் இழையோட்டி யிருக்கும் இளங்கோ அடிகளின் கவிதை ஆற்றல் போற்றி இன்புறற் குரியது.

சேரவேந்தன் வீரக் கண்ணகிக்குக் கடல் மலை நாட்டில் கோயில் எடுத்தான். தன்மானம் காக்கப் போர்க்கோலம் பூண்ட தமிழ் நங்கைக்கு, தமிழ் மானம் காக்கப் போர்க்கோலம் பூண்ட தமிழ் வேந் தன் அமைத்த கோயில் அது!

‘கண்ணகி கோட்டம்’ என்று காசினி புகழ, கற்புத் தெய்வத்திற்கு எடுத்த அக்கோயிலில், காவல்